தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு!
தமிழ்நாடு முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது உத்தரவில், ‘நாராயண சர்மா செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யான்சு நிகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக பொன்மணி, பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேத்தரீன் சரண்யா, கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியராக பிரியங்கா, நாகப்பட்டினம் சார் ஆட்சியராக குணால் யாத, திருவள்ளூர் பொன்னேரி சார் ஆட்சியராக வாகே சங்கெத் பல்வந்து, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியராக அர்பித் ஜெயின், ராமநாதபுரம் பரமக்குடி சார் ஆட்சியராக அபில்ஷா கொவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
இதுபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா, பெரம்பலூர் சார் ஆட்சியராக கோகுலும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக ராஷ்மி ராணியும், திருப்பூர் சார் ஆட்சியராக சவும்யா ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக முகமை அதிகாரிகளாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யாவும், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகவும், நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக், மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அஃப்தாப் ரசூல், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக கவுரவ், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஸ்வேதா சுமனை நியமித்துள்ளது தமிழகஅரசு. தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளில் 13 பேர் சார் ஆட்சியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPS-Transfers & Postings#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @tnpoliceoffl pic.twitter.com/oizxmwE614
— TN DIPR (@TNDIPRNEWS) December 14, 2023