மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து!

chennai flights

கடந்த 27 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு சுமார் 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கனமழையும் கொட்டி தீர்த்து வருகிறது.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்.! திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.!

இதுபோன்று, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாது கொட்டிய கனமழையால் மீனம்பாக்கம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனால் விமான நிலைய ஓடுதளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளதால், புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை வரவேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பட்டன. மேலும், மிக அவசியமாக இருந்தால் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ளுமாறும், அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மிக்ஜாம் புயல் நாளை காலை கரையை கடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்