எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அப்போது, இலங்கை, காரை நகர் தென்கிழக்கு கோவளம் அருகே இலநகை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயம் பிற்பகல் 2-4 மணிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களை தற்போது காரைநகர் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த முகாமிற்கு செல்ல 6 – 7 மணி அளவில் நேரம் ஆகும் என்பதால், அதன் பிறகு தான் மீனவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது .
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…