ரயில்களில் இதை பயன்படுத்தி பயணிப்பவர்களுக்கு 20% தள்ளுபடி…’மெட்ரோ நிறுவனம்’ அசத்தல் அறிவிப்பு.!!

Default Image

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இன்று முதல் பயண அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று, முதல் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த பயண அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பாதுகாப்பான கட்டண முறைக்காகவும் பயண அட்டை முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயண அட்டையை பயன்படுத்தி ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% தள்ளுபடி தரப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும்,  பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் இடத்திலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்