விழுப்புரத்தில் பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தெருநாவலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொத்தனூர் எனும் கிராமத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர், ஆனால் கிடைக்கவில்லை.
இது போல 2014 ஆம் ஆண்டில் சொலம்பட்டை எனும் கிராமத்தில் இதே போல பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் களியமூர்த்தி என்பவர் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ஐவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தை சேர்ந்த வடிவேல், மதியழகன், இளையராஜா, பாலமுருகன் மற்றும் குருபாலன் ஆகிய ஐவர் விழுப்புரம் மகளீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்றுள்ளது. இவர்கள் ஐவருக்கும் மகளீர் நீதிமன்றத்தில் வைத்து சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அடைப்பதற்காக இவர்களை தற்போது காவல்துறையினர் கூட்டி செல்கின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…