#BREAKING: +2 பொதுத்தேர்வு எப்போது..? முதலமைச்சர் ஆலோசனை..!

+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பலமுறை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 12 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்துதான் பொறியியல் மாணவர் சேர்க்கை, மருத்துவப் படிப்பு சார்ந்த சேர்க்கை எல்லாம் நடைபெற இருக்கின்றது என தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துவதா..? அல்லது மாணவர்கள் படிக்ககூடிய பள்ளிகளிலேயே வைத்து தேர்வு நடத்துவதா..? போன்ற முக்கியமான விஷயங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025