சிறை கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை.!
கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிப்பு உள்ளது. உலக முழுவதும் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. அதன்படி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மால்ஸ், திரையரங்கம் போன்றவைகளை மூட வலியுறுத்தியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க தடை விதித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் கைதிகளை சந்திக்க தடை விதித்துள்ளது.