கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிப்பு -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுதுஅவர் கூறுகையில், கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர். தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது.
11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.