#SRM மருத்துவமனையில் கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.!
தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டது.
இந்தியா கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது.
இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசி.எம்.ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து 12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை 2 மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள்.
SRM மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டது.
- செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம் பல்கலை துணைவேந்தர் ரவிகுமார் செய்தியாளர்களுடன் கூறுகையில, இந்த கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை 6 மாதம் வரை நடைபெறும் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் ரவிக்குமார் தேரிவித்தார்.
- தற்போது தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் மட்டும் பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 2 தன்னார்வலர்களுக்கு 0.5 எம்.எல் அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் விரைவில் கோவாக்சின் பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.