தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட 2 தமிழக ஆசிரியர்கள்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேசிய அளவில் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக பல நற்பணிகளை செய்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
ஆம் விழுப்புரத்தில் செஞ்சிக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் திலீப் என்பவருக்கும், சென்னையில் அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சரஸ்வதிக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.
விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லி விக்யான் பவனில் வைத்து செப்டம்பர் 5-ம் தேதி விருதினை வழங்குவார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)