காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் 2 வாலிபர்கள் கதவை பூட்டிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது சிக்னல் மூலமாக மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது.
உடனே மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என தெரியவந்தது. இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் யூடியூப் சேனலில் ஏடிஎம்மை எப்படி கொள்ளை அடிக்கிறது என வீடியோ பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்று வேறு வங்கி கிளைகளில் எங்கேயாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…