பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் – கல்லூரி முதல்வர்

Default Image

நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவத்தில் வசந்த் என்ற மாணவன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இது குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் நேற்று பட்டாகத்தியுடன் பேருந்தில் மோதி கொண்ட இரண்டு மாணவர்கள் மீது தற்காலிகமாக நீக்கம் செய்து உள்ளனர்.மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

மேலும் கல்லூரியில் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட குடும்ப சூழல் முக்கிய காரணம் என கூறினார்.கல்லூரியில் மாணவர்கள் ஆயுதங்களை எடுத்து வருவது இல்லை.மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாலும் , கல்லுரிக்கு அவபெயரை ஏற்படுத்தியதாலும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உள்ளோம்.

மோதலில் ஈடுபடும் மாணவர்களை திருத்துவற்காக மனநிலை ஆலோசனைகள் கொடுக்கப் படுகிறது.இப்போதும் மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்