வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்! தமிழக முதல்வர் அறிவிப்பு !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய அரசு இதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த மாநிலங்களில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாடு வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்களின் நலனை ஒருங்கிணைக்கவும், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது கண்காணிக்கவும், மேலும் இரண்டு தனி குழுக்கள் கூடுதலாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு ஒன்பது சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.