#BREAKING: +2 தேர்வு- சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை தொடங்கியது..!

Default Image
  • சட்டமன்றத்தில் முக்கியத்துவம் பெற்ற 13 கட்சிகளின் நிர்வாகிகள் உடன் அன்பில் மகேஷ் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் காணொளி மூலம் கருத்துக்கேட்பு நடைபெற்று வருகிறது.

நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார். இந்நிலையில், சட்டமன்றத்தில் முக்கியத்துவம் பெற்ற 13 கட்சிகளின் நிர்வாகிகள் உடன் அன்பில் மகேஷ் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, விசிக ,சிபிஎம், சிபிஐ, ம.ம.க, த.வா.க , புதிய பாரதம்  ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா..? என அன்பு மகேஷ் கருத்து கேட்பில் ஈடுபட்டுள்ளார். பிளஸ் டூ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவின் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கருத்துக்கேட்பு நடைபெற்ற பின்னர் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திக்க உள்ளார். இதை தொடர்ந்து, இன்று மாலை +2 தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்