+2 ரிசல்ட் இப்பவா?? அப்ப எழுதாதவங்க?? வெளியாகிய ரிசல்ட் தகவல்

Published by
kavitha

+ 2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் + 2 பொதுத்தேர்வானது, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியோடு  முடிவடைந்தது.தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் திவீரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியீடு பல சிக்கல் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில்,முடிவுகள் வெளியிடுவது, உயர்கல்வியில் மாணவர்கள்  சேருவதற்கான வாய்ப்புக்கு, முட்டுக்கட்டை போடுவது மட்டுமின்றி அவர்களுடைய எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பெற்றோரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளி மாவட்ட கல்லுாரிகளை பார்வையிடுவது மற்றும் அட்மிஷன் நடைமுறைகள் மேற்கொள்ள முனைப்பு காட்டி, பலரும் இ-பாஸ் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனாத் தொற்று உள்ள பகுதிகளில் இருந்து, பெற்றோர் வெளியே வர முடியாத சூழ்நிலை நீடிக்கிறது.இதனால் தங்கள் குழந்தைகள் விரும்பிய கல்லுாரியில் சேர முடியாத நிலை ஏற்படுமோ என்ற பதற்றமும் பெற்றோர் இடையே உருவாகலாம்.எனவே  இயல்பு நிலை திரும்பிய பிறகே முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு புறம் வலுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறுகையில் பள்ளி, கல்லுாரிகளில் எல்லாம்  புதியதாக அட்மிஷன் தொடங்க கூடாது என்கிற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

ஆகவே தற்போது தேர்வு முடிவுகள் வெளியிட்டாலும், எந்த பிரயோஜனமும் இல்லை. பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளே அதிகம் நிலவுகிறது. இதோடு, இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி, மதிப்பெண்கள் கணக்கிட்ட பிறகே ரிசல்ட் வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில்: தமிழக முதல்வரிடம் இது குறித்து கலந்து ஆலோசித்த பிறகே  முடிவுகள்  வெளியிடுவது குறித்து அறிவிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசின் முடிவு, மக்களை அலைக்கழிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

13 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

14 minutes ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

1 hour ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

2 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

2 hours ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 hours ago