# கவனத்திற்கு # +2க்கு ஆக.,1க்குள் ரிசல்ட்???தேர்வுக்கு தயாராக அறிவுரை!
ஆக.,1க்குள் தேர்வு முடிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்ச்சி அளிக்கும் வகையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டு முழுவதுமாக பள்ளிக்கு வராதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா, ஐந்து முதல் ஆறு பேர் வரை உள்ளதாகவும் இந்த விபரங்களை எல்லாம் பட்டியலிட்டு கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று முடிவு வெளியிடப்படும் என்றும் கடந்த மார்ச்.,24ல் நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வில் 34 ஆயிரம் தேர்வர்கள் பங்கேற்கவில்லை
மேலும் தேர்வில் பங்கேற்காத தேர்வர்களில் 718 பேர் மட்டுமே தேர்வை எழுத விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24ந்தேதி நடத்தப்பட்ட, இறுதி நாள் பொது தேர்வை, மாணவர்கள் சிலர் எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாக அவர்களுடைய பெற்றோர் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக வருகிற 27ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.மேலும் இதற்கான ஹால் டிக்கெட்டுகளை 13ம் தேதி முதல் 17 வரை, www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்,
மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று, ஹால் டிக்கெட்களை பெறலாம்.தேர்வு மையங்களுக்கு செல்ல, மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தேர்வு மையம் அமைக்கப்படாது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கின்ற மாணவர்களுக்கு, தேர்வு எழுத தனி அறை ஒதுக்கி தரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 2வில் விடுபட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு முடிந்த 3 நாட்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதனால், 27ல் மறுதேர்வு முடியும் பட்சத்தில் ஆக.,1க்குள் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது எதிர்பார்க்கப்படுகிறது.