#Breaking:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தொடங்கிவுள்ளது. இந்த தேர்வில் தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்து 401 மாணவர்கள் மற்றும் புதுவையில் 14, 958 மாணவர்கள் இன்று பொதுத்தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளான இன்று மொழிப்பாடம் நடைபெறுகிறது.
இந்த பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிந்து அதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என தேர்வு குழு அறிவித்துள்ளது.