பிளஸ் டூ பொதுத்தேர்வு.,, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!

37 முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொளியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12-ஆம் வகுப்பு தேர்வு குறித்து நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், 37 முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொளியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025