+2 பொதுத்தேர்வு… இன்று ஹால் டிக்கெட் வெளியீடு..!

school

தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்க செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு  மற்றும்  12-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு குறித்து கால அட்டவணை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி  பொதுத்தேர்வு நிறைவடைகிறது.

12 ஆம் வகுப்பை தொடர்ந்து 11-வது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்