வழிப்பறி செய்த 2 போலீசாருக்கு ஒரு ஆண்டு சிறை – உயர்நீதிமன்றம் அதிரடி .!

Default Image

மதுரை சார்ந்த  நகைக்கடை ஊழியர்கள் 2 பேர் கடந்த 2005-ம் ஆண்டு 4 லட்சம் ரூபாயுடன் சென்னைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். இதை தெரிந்து கொண்டு மதுரை உளவு பிரிவு தலைமை காவலர் மீனாட்சி சுந்தரம் , மதுரை திருமங்கலம் போலீஸ் நிலையம் தலைமை காவலர் பன்னீர்செல்வம் இருவரும் அந்த 2 பேரையும் பின் தொடர்ந்து சென்னை சென்றுள்ளனர்.

சென்னையில் உள்ள உயர்நீதிமன்றம்  அருகே இந்த நகை கடை ஊழியர்களை வழிமறித்து போலீஸ்காரர்கள் பணத்தை பறித்துள்ளனர். அவர்கள் சத்தம் போட்டதால் அப்போது ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அவர்கள் இருவரையும் வைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் இந்த வழி பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சென்னை செசன்சு நீதிமன்றம்  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் கடந்த 2008-ம் ஆண்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார்  மீனாட்சி சுந்தரம் , பன்னீர்செல்வம் ஆகிய 2 காவலர்களையும்  நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று இந்த வழக்கில் போலீஸ்காரர்கள் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் , 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்