கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (மார்ச் 21ஆம் தேதி) மதியம் 1.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை அருகே ஜெகன் எனும் 28வயது இளைஞர் ஒரு கும்பலால் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆணவ கொலை :
உயிரிழந்த ஜெகன் , சரண்யா எனும் பெண்ணை அண்மையில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக தான் சரண்யாவின் தந்தையும், அரசியல் பிரமுகருமான சங்கர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த ஆணவ கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பெண்ணின் தந்தை சரண் :
இந்த ஆணவ கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், முதலில் பெண்ணின் தந்தை சங்கர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளார்.
மேலும் இருவர் சரண் :
இதனை தொடர்ந்து இன்று, காவல்துறையால் தேடப்பட்டு வந்த முரளி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…