நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் – ஈபிஎஸ் கண்டனம்

ADMK Chief secretary Edappadi Palanisamy

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். இந்த தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மக்களவையில் அனுசரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து இருந்த மஞ்சள் நிற வண்ணப்புகை வீசும் ஒரு வகை பட்டாசை வீசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும் பதற்றம்.! நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள்.. பாதுகாப்பு அத்துமீறல்.?

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer