அம்மா உணவகத்தை சூறையாடிய 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்..!
அம்மா உணவக பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் திமுகவை சேர்ந்த 2 பேர் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை கிழித்ததும், உணவகத்தையும் சூறையாடினர். அம்மா உணவகத்தை திமுகவை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை தொடர்ந்து பலர் அம்மா உணவகத்தை சூறையாடியதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அம்மா உணவக பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், பெயர் பலகையை மீண்டும் பொருத்தவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்… pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021