வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு…முதலமைச்சர் இரங்கல்..நிவாரணம் அறிவிப்பு.!
பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
வெடிவிபத்து இரண்டு பேர் பலி
சிவகாசி மாவட்டம் அருகே விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமாக தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. நேற்று பட்டாசு ஆலையில் ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் தங்கவேல் மற்றும் கருப்பசாமி என்பவர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதலவர் இரங்கல்
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ” வெடி விபத்தில் தங்கவேல் மற்றும் கருப்பசாமி என்பவர்கள் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.
விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவிமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.#Dinasuvadu | #MKStalin | #Sivakasi pic.twitter.com/GTgz1xNylI
— Dinasuvadu (@Dinasuvadu) April 16, 2023
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமமைனயில் சிகிச்சை பெற்றுவருபவரும் கருப்பம்மாள், என்பவருக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிவிக்கப்பட்டுள்ளது.