[File Image]
சிவகாசி: காளையார்குறிச்சியில் உள்ள தனியார் பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகன் என்பவருக்கு சொந்தமாக தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் பல்வேறு அறைகள் உள்ளன. இதில் இன்று காலை குறிப்பிட்ட ரக பட்டாசு தயாரிக்கும் அறையில் 4 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
அப்போது, பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன், முத்துமுருகன் எனும் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து அறிந்ததும், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு விபத்தில் சிக்கிய மேலும் 2 தொழிலாளர்களை மீட்டு அவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தற்போது துணை ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…