தென்காசியில் தீண்டாமை.! குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்.! 2 பேர் அதிரடி கைது.!
பள்ளி குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மாட்டேன் என தீண்டாமை கடைபிடித்த தென்காசி, பாஞ்சாகுளத்தை சேர்ந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமசந்திரன் கைது செய்யப்பட்டுள்ள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, பாஞ்சாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் பயின்று வரும் பள்ளி குழந்தைகள், அருகில் உள்ள மிட்டாய் கடைக்கு தின்பண்டம் வாங்க வந்துள்ளனர்.
ஆனால் கடையின் உரிமையாளர் அந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. என கூறுகிறார். உடனே, ஏன் என அந்த குழந்தைகள் கேட்டவுடன், உங்களுக்கு கொடுக்க கூடாது என ஊர்க்கட்டுப்பாடு போட்டுள்ளது என கூறிவிடுகிறார்.
இருந்தும், ஊர்க்கட்டுப்பாடு என்றால் என்ன என்று அந்த குழந்தைகள் கேட்கவே, ‘ஊர் கட்டுப்பாடு. கொடுக்க கூடாது. உங்க வீட்டில் சொல்லுங்க சரியா போங்க’ என அந்த குழந்தைகளை திருப்பி அனுப்பிவிடுகிறார். ஏமாற்றத்துடன் அந்த பிஞ்சு குழந்தைகள் திரும்பி செல்கின்றனர். நேற்று முதல் இந்த உரையாடல் நடந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பகிரப்பட்டது.
இதனை தொடர்ந்து, தீண்டாமை கடைபிடித்த இந்த கடையின் உரிமையாளரை தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தனர். மேலும், பாஞ்சாகுளத்தில் அமைந்துள்ள கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமசந்திரன் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.