சென்னையில் அறநிலையத்துறை சார்பில், 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தகவல்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் அறநிலையத்துறை சார்பில், இரண்டு புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, இந்த ஆண்டே தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, கோயில் அன்னதானம், இனி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கொரோனா காலத்தில் பயனுள்ளதாக அமைந்தது.
மேலும், கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் கோவில் நிலங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன், கோவில்களில் உள்ள வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் அறநிலையத்துறை மட்டுமின்றி பல்வேறு வகைகளில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…