சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை இரண்டாவது நாளாக வேல் யாத்திரை தொடங்கியது.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் காலை தடையை மீறி, கையில் வேலுடன் தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் திருத்தணி நோக்கி புறப்பட்டார். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை இரண்டாவது நாளாக வேல் யாத்திரை தொடங்கியது. அதனை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…