தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை 36- ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 5000-6000 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரசின் தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அந்தவகையில் இன்று மேலும் இரண்டு எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. பாரதிக்கு கொரோனா:
முதல்வர் கூட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சீர்காழி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக எம்.எல்.ஏ. மதிவாணனுக்கு கொரோனா:
அவரை தொடர்ந்து, மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ.க்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் திமுக எம்.எல்.ஏ மதிவாணனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.