திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் மேலும் 2 அதிமுகவினரை கைது செய்த போலீசார்.
சென்னை தண்டியார்பேட்டையில் திமுக தொண்டர் நரேஷை தாக்கிய வழக்கில் மேலும் இரண்டு அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசென்னை அம்மா பேரவை இணை செயலர்கள் பரமேஸ்வரன், டில்லி ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில், திமுகவை சேர்ந்த கொளஞ்சியப்பன், ஸ்ரீதர், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளன்று திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் முன் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பபுழல் சிறையில் உள்ளார் என்பதுகிபிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…