பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக இருக்கலாம்..! அமைச்சர் உதயநிதி.
Udhayanidhi Stalin : பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமாக கூட இருக்கலாம் என அமைச்சர் உதயநிதி பேசினார்.
சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் இவ்வாறு அமைச்சர் பேசியுள்ளார். தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
Read More – பிரதமர் மோடி வருகை… விண்ணில் ஏவப்படும் சிறிய ராக்கெட்.! இன்றைய பயண திட்டங்கள்….
அவர் பேசும் போது, ”அதிமுகவில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தமிழக பாஜகவினர் சொல்கின்றனர். அதே போல இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் என அதிமுகவினர் சொல்கின்றனர். எதற்கு போய் சேரவேண்டும், இரண்டு கட்சிகளும் ஒன்று தான்.. இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்வதாக சொல்லப்படும் நிலையில் அது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆக கூட இருக்கலாம்.
Read More – அண்ணாமலை கடை போனியே ஆகாத கடை- ஜெயக்குமார்..!
அந்தளவுக்கு அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து நாடகம் நடத்துகிறது. இதுவரையில் பாஜக கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்துவிட்டு இப்போது அதிமுக நாடகம் போடுகிறது. அதிமுக கட்சி தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதே.. இப்போதாவது பாஜக அரசையும், பிரதமரையும் எதிர்க்கவோ தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்குமாறு கேட்கவோ அதிமுகவுக்கு தைரியமும், திராணியும் உள்ளதா என கேள்வியெழுப்பிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வருவார் என்றார்.