அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் 2 முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக நட்சத்திர ஓட்டலில் பாஜக ஏற்பாடுகளை செய்திருந்தாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நிகழவில்லை. இருப்பினும், மக்களவை தேர்தலுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் பாஜகவுடன் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
Read More – தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…
இந்த சூழலில் தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் மற்றும் திடீர் திருப்பமாக பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தகவலை செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இன்று மதியம் 2.15 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளனர். இதனை சிரிப்புக்காக சொல்லவில்லை, உண்மையில் இன்று 2 பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளனர். அது கொங்கு மண்டலமாகவும் அல்லது தென் மாவட்டங்களை சேர்த்தவர்களாகவோ இருக்கலாம் எனவும் உறுதிபட கூறியுள்ளார்.
Read More – பலதுறை பிரதிநிதிகளுடன்.. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை..!
தொடர்ந்து பேசிய அவர், நான் அதிமுகவில் ராஜாவாக உள்ளேன், எதற்காக பாஜகவில் இணைந்து கூஜா தூக்க போகிறேன்?. கொங்கு மண்டலத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இந்தியாவிலேயே தனித்து நின்ற கட்சி எதுவும் இல்லை. அதிமுகத்தான் அதனை செய்துள்ளது.
அதிமுக ஆதரவில் தான் பாஜகவினர் சட்டமன்ற உறுப்பினர்களானவர்கள். மகாராஷ்டிராவை போன்று தமிழ்நாட்டில் அதிமுகவில் ஏக்நாத் ஷிண்டேவை பாஜகவில் உருவாக்க முடியாது. அதிமுகவில் தொண்டர்களை கூட பாஜகவில் இழுக்க முடியாது. பாஜகவில் பேர் சொல்லும்படி யார் இருக்கிறார்கள்? அந்த கட்சியில் நாங்கள் ஏன் இணைய போகிறோம். பாஜகவுக்கு தில் இருந்தால் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்.
Read more – நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!
பாஜக வெல்வதற்கு இது ஒன்றும் வடமாநிலம் அல்ல தமிழ்நாடு. அதிமுகவை நம்பி தான் அனைவரும் வருவார்களே தவிர, இங்கிருந்து யாரும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் அவர்கள் உண்மையான அதிமுகவே கிடையாது என்றார். எனவே, அதிமுகவில் இருந்து விலகி முக்கிய புள்ளி பாஜகவில் இணைவதாக நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பாஜகவில் ஒருவரும் இணையாத நிலையில், தற்போது அக்கட்சியின் 2 முக்கிய எம்எல்ஏக்கள் இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக அம்மன் அர்ஜுனன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.