#Breaking : மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் சார்பில் 2 அவதூறு வழக்குகள் !
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற திருமணவிழா ஒன்றில் பேசுகையில், பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி எதிர்த்துக் கொண்டு வருகிறார். ஆகையால் இந்தியா முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த ஆட்சி என்று பேசினார். மேலும் தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று பேசினார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகள் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் கௌரி அசோகன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், தமிழக அரசு நல்லாட்சி விருது கிடைத்தது குறித்தும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஸ்டாலினை பேசியது தமிழக அரசுக்கும்,முதலமைச்சருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மேலும் ஸ்டாலின் அவதூறு சட்டத்த்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.