கோவையில் 2 பேர் உயிரிழப்பு ! ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு
கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் போரூரில் செட்டி வீதியில் உள்ள 2 அடுக்குமாடி வீடு கனமழையால் இடிந்து விழுந்ததை அடுத்து அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கியதாக கூறப்பட்டதை அடுத்து இடிபாடுகளில் சிக்கி ஸ்வேதா (27) மற்றும் கோபால்சாமி (70) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதனையடுத்து விடிய விடிய மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 6 வயது சிறுவன் உட்பட 4 பேரை காயங்களுடன் மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோவையில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு#EdappadiPalaniswami | #kovai pic.twitter.com/8VOzexfkws
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 7, 2020