குடும்ப அட்டைதாரர்களுக்கு 2கிலோ கேழ்வரகு, சிறுகுறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு.!
வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2கிலோ கேழ்வரகு வழங்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், இனி ரேஷன் கடைகளில் கம்பு மற்றும் கேழ்வரகு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்.
மேலும் சிறுகுறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கப்படும் எனவும் இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.