சித்த மருத்துவ சான்றிதழ்.. ஆங்கில மருத்துவம்.! சிவகங்கையில் கைதான கைராசி போலி மருத்துவர்கள்.!
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை பகுதியில் தாரகராமன் என்பவரும், அமரவத்திபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரும் போலி மருத்துவர்கள் என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்
தமிழகத்தில் அவ்வப்போது, போலி மருதுவ சான்று வைத்தோ, அல்லது எந்தவித உரிமமும் இன்றியும் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள் அவ்வப்போது சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதை ஆக இருக்கிறது.
அப்படிதான் தற்போதும் ஓர் அதிரடி சோதனையில் இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட சுகாதர இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்.
அதில், தேவகோட்டை அருகே, சித்த வைத்தியம் பார்ப்பதற்கு சான்று வைத்து கொண்டு ஆங்கில வைத்தியம் பார்த்த தாரகராமன் என்பவரும், அமரவத்திபுரம் பகுதியை சேர்ந்த கைராசி மருத்துவர் என பெயர் எடுத்த முருகானந்தம் என்பவரும் போலி மருத்துவர்கள் என கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.