#BREAKING: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு .., கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு – அன்பில் மகேஷ்..!

Default Image

பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து  மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். அனைத்து தரப்பின் கருத்துக்களை கேட்டபின் பிளஸ் டூ தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவுகிறது. சில மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றும் சில மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருவதாக கூறினார். மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal