+2 பொதுத்தேர்வு- நாளை கருத்துக் கேட்பு..!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை கருத்து கேட்பு என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் +2 தேர்வு குறித்த முடிவுகளை பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் தலைமையாசிரியர் மூலமாக அவர்களின் பள்ளி மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.