பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3-ஆம் தேதி தொடங்கி மே 21 முடிவடைய உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு தேதி அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை தேர்தல் 93,000 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 11, 12-ம் தேதி தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என கேட்டறிந்தார். இதனால், ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…