#BREAKING: சிபிஎஸ்இ தேர்வை பொருத்தே தமிழகத்தில் +2 தேர்வு – அன்பில் மகேஷ்
சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்பு தொடங்கும் முன் பாடப்புத்தகம் தருவது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிக்கு இணையாக விளம்பரப்படுத்த திட்டம் என தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.