ஒரு மக்களவை தொகுதிக்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் : சத்யபிரதா சாஹூ
- ஒரு மக்களவை தொகுதிக்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பல ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது, அதற்கான நிதி ஆதாரம் பற்றி தெரிவிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒரு மக்களவை தொகுதிக்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர் எனவும், தமிழகத்தில் இதுவரை ரூ.9 கோடியே 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.