திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

dmk website

புதுபொலிவூட்டப்பட்ட திமுக இணையதளத்தை முதலமைச்ச மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திமுகவின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதுப்பிக்கப்பட்ட இணையதளம் http://dmk.in பயன்பாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்க வரலாறு தலைவர்களின் போராட்டங்கள் – தியாகங்கள், திமுக ஆட்சி கால சாதனைகள், அரிய புகைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள், நமது திராவிட நாயகன், திராவிட மாடல் அரசின் அன்றாட செயல்பாடுகள், சாதனை திட்டங்கள், கழக உறுப்பினர் சேர்க்கை, உடன்பிறப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. கையெழுத்து பிரதி இதழ்கள் முதல் கணினி வரை திமுக கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டி அறிய செய்வோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்