வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடி ஏமாற்றிய நபர்!தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று மிரட்டிய சம்பவம்!
- கோவையை சேர்ந்த நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகவும் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார்.
- இதனால் பணம் கொடுத்து ஏமாந்த நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் ஆவார்.இவர் கன்சல்டிங் மூலம் இளைஞர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சையது அசாருதீன் என்ற இளைஞர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
இதன் காரணமாக சிவக்குமாரும் அந்த நபரை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சி செய்துள்ளார்.திடீரென ஒருநாள் அந்த நபர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு தனது உறவினர் ஒருவருடன் கனடா நாட்டிற்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறிய அசாருதீன் பின்னர் சிவக்குமாரை அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது ஒருமுறை அவர் கனடாவில் பெரிய நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த நிறுவனத்திற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பினால் கமிஷனாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெற்று கொள்ளலாம் என்று கூறியதோடு முன்பணமாக 30 லட்சம் தருமாறும் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய சிவக்குமார் இளைஞரிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பணம் பெற்று அசாருதீனிடமும் அவரது சகோதரியிடமும் 2 கோடி வரை கொடுத்துள்ளார்.ஆனால் அசாருதீன் ஒருவரை கூட வேலைக்கு அழைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார் அவரிடம் கேட்டபோது தீவிரவாதிகளுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.அப்போதுதான் சிவகுமாருக்கு அசாருதீன் கோவையில் இருந்துகொண்டே தம்மிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
இதனால் ஆதாரத்துடன் சிவக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் அஸாருதீனை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.