உலகின் சிறந்த 100 மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 கல்லூரிகள் தேர்வு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலகில் உள்ள 100 சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மருத்துவக்கல்லூரிகள் தேர்வாகியுள்ளது.
உலகின் மிக சிறந்த 100 மருத்துவக்கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 மருத்துவ கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 23 ஆவது இடத்தையும், புனே ராணுவ மருத்துவ கல்லூரி 34 ஆவது இடத்தையும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி 59 ஆவது இடத்தையும், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி 72 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி 49 ஆவது இடத்தையும், சென்னை மருத்துவ கல்லூரி 64 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும், இந்த தரவரிசையில் முதல் இடத்தை அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.