தமிழகத்தில் நுழைந்ததா HMPV தொற்று? சென்னையில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு! 

சென்னயில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HMPV Virus

சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்கு வந்ததாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் சென்னையில் சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கண்ட இரு குழந்தைகளும் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் சார்பில் மாவட்ட எல்லைகளில் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

HMPV தொற்று குறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும், பொதுவான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இது நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்