சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. பின்னர், என்று இன்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடைபெற்றது. இவர்கள் அனைவரிடமும் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்த்தார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…