வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பின் கோவை சிறையில் இருந்து விடுதலை.
கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ஆளுநர் கையெழுத்திட்டதால் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது.
பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திமுக அரசின் பரிந்துரைக்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர். ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து ஆண்டியப்பன், பெருமாள் 2 பேரும் நேற்று முன்தினம் கோவைக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…