வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை!

Default Image

வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பின் கோவை சிறையில் இருந்து விடுதலை.

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ஆளுநர் கையெழுத்திட்டதால் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திமுக அரசின் பரிந்துரைக்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர். ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து ஆண்டியப்பன், பெருமாள் 2 பேரும் நேற்று முன்தினம் கோவைக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்