#Breaking:+2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு..!

Published by
Dinasuvadu desk

பிளஸ் டூ தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு  அளித்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நமது மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்டு 2021 திங்களில் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17()-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும்.

மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில்  இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

Published by
Dinasuvadu desk
Tags: +2 students

Recent Posts

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…

43 mins ago

தமிழகத்தில் புதன் கிழமை (20/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…

2 hours ago

அமரன் வசூலில் மட்டுமில்ல ஓடிடியிலும் சாதனை! எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…

3 hours ago

நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…

3 hours ago

பிரச்சனை முடிந்தது., இந்தி இல்லை., இப்போது ஆங்கிலம்! – LIC விளக்கம்!

டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…

3 hours ago

“ஸ்டார்ட் அப் தொடங்குறேன் நிதி வேணும்”…கவனத்தை ஈர்த்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…

4 hours ago