தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்பு.?

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது.

இதனால், கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் முறையை முதல்வர் அறிவித்தார். அதன்படி இந்த உத்தரவு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal